Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

In which cities are the holidays for schools today! District Collector announced!

In which cities are the holidays for schools today! District Collector announced!

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது.அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.சென்னையை பொறுத்தவரை கடந்த 31ஆம் தேதி முதல் மழை பொழிவு அதிகம் உள்ளது.

இந்த வாரம் முதலில் இருந்தே ஆங்கங்கே மழை பொழிந்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தயும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சென்னையில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகின்றது.எழும்பூர் ,புரசைவாக்கம் ,சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது .

அதன் காரணமாக மயிலாடுதுறை ,திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி ,பூந்தமல்லி ,பொன்னேரி, திருவள்ளூர், ஆகிய நான்கு நான்கு இடங்களிலும் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version