எந்த ராசிக்கு எந்த திசையில் வீடு கட்ட வேண்டும்? 12 ராசிகளுக்கும் உண்டான பலன்! இத தெரியாம வீடு கட்டாதிங்க!! 

0
292
In which direction should a house be built for which zodiac sign? The benefits of 12 zodiac signs! Don't build a house without knowing this!!
ஒவ்வொருவருக்கும் சொந்தமான வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று கனவு இருக்கும். இது அனைத்தும் ராசி மற்றும் ஜாதகத்தின் அடிப்படையிலேயே அமையும். அவ்வாறு வீடுகட்டும் யோகம் இருந்து வீடு கட்டுவது போல இருந்தால் நாம் வீட்டின் வாசலை நம்முடைய ராசிப்படி வைக்க வேண்டும். அந்த வகையில் மேஷம், ரிஷபம், மிதுனம் உள்பட 12 ராசிகளுக்கும் எந்த திசையை பார்த்து வீட்டின் வாசலை கட்டினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
* மேஷம் ராசியில் பிறந்த அனைவரும் வீடு கட்டும் பொழுது மேற்கு திசையை நோக்கி வீட்டின் வாசலை வைக்க வேண்டும். அவ்வாறு மேற்கு திசையில் வாசலை வைக்கும் பொழுது தென்மேற்கு திசையில் சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் வீடு கட்டும் பொழுது வடக்கு திசையை நோக்கி வீட்டின் வாசலை வைக்க வேண்டும்.
* சிம்மம் ராசியில் பிறந்த நபர்கள் வீட்டின் வாசலை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அவ்வாறு கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். கிழக்கு திசையில் வாசல் அமைக்க முடியாத பட்சத்தில் மேற்கு திசையில் வைக்கலாம்.
* அது போல கன்னி மற்றும் துலாம் ராசியில் பிறந்த நபர்கள் அனைவரும் வீட்டின் வாசலை கிழக்கு திசையில் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் பட்சத்தில் அவர்களிடமும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.
* தனுஷ் ராசியில் பிறந்த நபர்கள் அனைவரும் வீட்டின் வாசலை தெற்கு திசையில் பார்த்தபடி அமைக்கலாம். அதே போல வீட்டின் வாசல் அதிகளவு தென்மேற்கு திசைக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மகரம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் அனைவரும் தெற்கு திசையில் வாசல் இருக்கும் படி வீடு கட்டலாம். அவ்வாறு கட்டினால் அவர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் அதிகரிக்கும்.
* கும்பம் மற்றும் மீனம் திசையில் பிறந்த ராசிக்கார்கள் வீட்டின் வாசலை மேற்கு திசையில் வைத்து கட்டலாம்.
சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் பூமிக்காரகன் என்று மற்றொரு பெயர் கொண்ட செவ்வாய்க்கு அதிதேவைதை தெய்வமான முருகனை வழிபட்டு வர வேண்டும்.