Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 29-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக நேற்று கலந்து கொண்டார்.பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

உயர்கல்வித் துறையில்,தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது தேசிய அளவில் காட்டிலும் அதிகமானதாகும்.இது மட்டுமின்றி தமிழகத்தில் முறையான உட்கட்டமைப்பு வசதிகள்,சூழல்,மனித வளம், அதிகமாக உள்ளதால் இன்றளவிலும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசின் மூலம் நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்புகளில் மூலம் தற்போது தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகள் ஏற்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் நோய்த்தொற்று தாக்கத்தால்,தொழில் துறையில் பெரும் மந்தம் நிலை நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தொழில் முதலீடுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் பேசிய முதல்வர் அரசின் நடவடிக்கைகள் காரணமாக பட்டப்படிப்பு முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளன.இதுமட்டுமின்றி சுயமாக தொழில் தொடங்குபவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும் ஊக்கத்தொகைகளையும் அளித்து வருகின்றது.

இதை கருத்தில் கொண்டு பட்டம் பெற்று வெளியில் வரும் மாணவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டவேண்டும் என்றும், அவ்வாறு சுயதொழிலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரசு அனைத்து விதமான ஊக்கத்தொகையும்,சலுகையும் வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை நான் மனதார பாராட்டுகின்றேன் என்றும், மாணவர்களுக்கு தேவையான எதையும் அவர்களால் பெற்றுக்கொள்ளமுடியும், நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுடன், பயணிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version