Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BAJAJ FINSERV அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் !

Bajaj Finance அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் !

பஜாஜ் பைனான்ஸ் அலுவலர் ஒருவர் தன் மனைவியிடம் அவதூறாக பேசியதால் கணவன் பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பஜாஜ் பைனாஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. சரஸ்வதி என்பவர் அவரது உறவினருக்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்க ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

கடந்த வருடம் முழுவதும் சரியான நேரத்தில் வட்டி கட்டி வந்திருக்கிறார் சரஸ்வதி. கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வேலையின்றி தவிப்பதால் கட்டாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சரஸ்வதியை தொடர்பு கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரி கடனை கட்ட சொல்லியும் மேலும் அவதூறாகவும் பேசி திட்டியுள்ளார். இந்த அதிகாரி அவதூராக பேசியதை சரஸ்வதி தனது கணவரான ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் ராஜா தனது உறவினர்களோடு சென்று புதுச்சேரியில் உள்ள பஜாஜ் நிறுவனத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளார்.
மேலும் அவதூறாக பேசிய அதிகாரி இங்கு வந்தாக வேண்டும் என்று மாஸ் காட்டி அலுவலகத்தையே அடித்து நொறுக்கியுள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Exit mobile version