பாலக்காடு-சாலிமர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 22 இளம்பெண்ணிடம் 42 வயது ஆண் செய்த சம்பவத்தால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கோவை காவல்துறை அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் நீண்ட தூரத்திற்கு குறைந்த செலவில் செல்ல பயன்படுத்தப்படும் போக்குவரத்து ரயில் போக்குவரத்து. ரயில் போக்குவரத்தை நம்பி ஏராளமான மக்கள் உள்ளனர். பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் சென்று பாலக்காடு-சாலிமர் வரை செல்லும் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். படுக்கை வசதி கொண்ட எஸ் 14 பெட்டியில் பெற்றோருடன் அந்த இளம்பெண் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த 42 வயது பயணி ஒருவர் ஓடும் ரயில் என்று கூட பார்க்காமல் இரவு 1 மணிக்கு தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.சத்தம் கேட்டு பெற்றோர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் எழுந்தனர்.
அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து, பயணிகள் அனைவரும் அந்த முத்தம் கொடுத்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பிறகு ரயில் வந்து சேர்ந்ததும் கோவை போலீசிடம் பிடித்து ஒப்படைத்தனர்.