Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

கிணற்றில் தவறி விழுந்த தனது மகனை, நீச்சல் தெரியாத தாய் காப்பாற்ற முயன்று கிணற்றில் குதித்து இருவரும் இறந்த சோகம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தயோகேஷ் என்பவர், தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யோகேஷ் திடீரென கிணற்றில் மூழ்கியுள்ளார்.

மகன் கிணற்றில் தத்தளித்த கொண்டிருந்த அலறிய சத்தம் கேட்ட யோகேஷ்யின் தாய், தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை கண்டார். மகன் தத்தளித்துக் கொண்டு இருப்பதனை கண்ட தாய், சிறிதும் சிந்திக்காமல் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், கிணற்றில் குதித்த தாய்க்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் மூச்சுத்திணறி கிணற்றில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நீச்சல் தெரியவில்லை என்றாலும், கிணற்றில் உள்ள தனது மகனை காப்பாற்ற முயன்ற தாயும் மரணமடைந்தது அவ்வூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version