Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி…!

திமுக கோயம்புத்தூர் மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

கோவை மாநகரம் திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர், பையா கவுண்டர் எனும் ஆர் கிருஷ்ணன் கடந்த 2016ஆம் வருட தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருந்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய புள்ளியாக வலம் வரும் இவருடைய இல்லத்தில் வருமான வரித்துறையினர் சுமார் பத்திற்கும் அதிகமானோர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நேற்றைய தினம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பையா கவுண்டர் இல்லத்தில் இன்றைய தினம் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்0 அதுபோல் தமிழ்நாட்டில் ஈரோடு திருப்பூர் சென்னை உள்பட 22 இப்பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Exit mobile version