சட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியதே சுமார் 12 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் எந்த விதமான ஆதாரங்களோ அல்லது வரி எய்ப்போ கிடைக்கவில்லை என்று திமுகவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஆனால் வருமானவரித்துறையின் இந்த அதிரடி சோதனையின்போது சபரீசன் வீட்டில் சுமார் 800 கோடி ரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது .ஆனாலும் திமுகவினர் ஸ்டாலின் மருமகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று மகிழ்ச்சியில் தான் இருந்து வருகிறார்கள்.
இருந்தாலும் இந்த வருமான வரித்துறையின் அதிரடி சோதனை முடிவில் சுமார் 8 பார்க்க ரகசிய அறிக்கையை வருமானவரித் துறையின் தலைவருக்கு அனுப்பி இருக்கின்றார் தமிழகத்தில் இருக்கின்ற ஒரு மூத்த வருமான வரித்துறை அதிகாரி அதில் பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையை பார்த்த மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் ஒரு ரகசிய குறிப்பை பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும், அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சபரீசன் துபாயில் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தொடர்பான விசாரணை தேவை என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் சபரீசனுக்கு பிரச்சனை தொடங்கும் என்றும் தெரிவிக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
அதேபோல சபரீசன் வீட்டில் சுமார் 800 கோடி ரூபாய் அளவில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியே ஆட்சியில் தொடரும் என்று மத்திய உளவுத்துறை அறிக்கை தெரிவித்தது. அதனை பார்த்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த போகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அப்படி ஒருவேளை ஆளும் கட்சியான அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டால் அமித்ஷா சொன்ன அந்த அதிரடி திட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது எதிர்கட்சியான திமுகவை இந்த வருமானவரித்துறை சோதனையை வைத்தே காணாமல் போக வைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகிறது