Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..! வருமான வரித்துறை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான 2000 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

கடந்த மாதம் போயஸ் தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பங்களா உள்பட சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் பெயர்களில் இருக்கும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் பெயர்களில் இருக்கும் சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சொத்துகள் முடக்கப்பட்டதன் தொடர்பான நோட்டீஸை சம்பந்தப்பட்ட இடங்களில் ஒட்டுவதற்கான ஏற்பாடுகளையும் வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா தண்டனைக் காலம் முடிவடைந்து அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளார். இந்நிலையில், அவரது பெயரில் இருக்கும் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.

Exit mobile version