வருமான வரித்துறை அதிகாரி தூக்கில் பிணமாக தொங்கினார்: கொலையா? தற்கொலையா? அதன் பின்னணி

0
115

சென்னையில் வருமான வரித்துறை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தின் லேக் ஏரியா ஆறாவது தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன். அவருக்கு வயது 54. இவர் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி துறை அலுவலகத்தில், சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான உளவுப் பிரிவில் சீனியர் நுண்ணறிவு என்ற பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது மனைவி கலாவும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், உளவுப்பிரிவு அதிகாரி மணிகண்ணனுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருந்ததாக கூறுகின்றனர்.

அதன்பிறகு அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாவது தெருவில் தனது மற்றொரு சொந்த வீட்டில் நேற்று காலை 7 மணிக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது அங்கு அவர் சடலமாக தூக்கில் தொங்கினார்.

அதன்பிறகு தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர் மணிகண்டன் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்கும்போது, அவர் “தான் வாழ பிடிக்கவில்லை எனவும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு மணிகண்ணன் கையொப்பமிட்ட கடிதத்தினை பறிமுதல் செய்துள்ளோம், மேலும் விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.