கொரோனா பரவல் அதிகரிப்பு! மூடப்படும் மதுக்கடைகள்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ஆறு மாதத்திற்கு லாக்டவுனிலும் அடுத்த ஆறு மாதத்திற்கு தளர்வுகளுடனும்,இவ்வாறே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.மக்கள் நிரந்தரமாக ஒர் நடைமுறை வாழ்க்கையை வாழ இன்றளவும் முன்னேறவில்லை.ஒவ்வோர் வருடமும் கொரோனா தொற்று அதிகரித்து முழு ஊரடங்கில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிலருக்கு வேலை போய்விடும் அபாயம் கூட ஏற்பட்டு விடுகிறது.மீண்டும் அடுத்த ஆறு மாதத்திற்கு வேறு வேலை தேடும் பணியை தொடங்குகின்றனர்.இவ்வாறு தொடர்ந்து கொண்டே சென்றால் மக்களால் நடைமுறை வாழ்க்கையை வாழ முடியாமல் போய்விடும்.மக்கள் அனைவரும் அரசாங்கம் கூறும் நடவடிக்கைகளையும்,விதிமுறைகளையும் கடிபிடித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக மீண்டு வரமுடியும்.பொதுமக்கள் அனைவரும் உயிர் சேதங்கள் அதிகப்படியாக நடந்த பிறகு தான் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர்.கொரோனாவின் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவீரமடையும் என ஆரய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
கொரோனாவின் இரண்டாவது அலையின் போது டெல்லி,தமிழ்நாடு,கேரளா,குஜராத் போன்ற மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது.தற்போது டெல்லி,தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.ஆனால் கேராளவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.அதனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு எனக் கூறியுள்ளார்.இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் போக்குவரத்து,வணிக வளாகங்கள்,மதுக்கடைகள் ஆகியவற்றை திறப்பதற்கு தடை விதித்துள்ளார்.
அத்தோடு வங்கிகள் போன்றவை செயல்படுவதற்கும் தடை விதித்துள்ளார்.தேனீர்,காய்கறி போன்ற கடைகள் நேர அவகாசத்துடன் இயங்க அனுமதி அளித்துள்ளார்.பால் விநியோகம் தினசரி நடைமுறையை போலவே இயங்க அனுமதி தந்துள்ளார்.இந்த இரு நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறையுமாயின் முழு ஊரடங்கை தற்றப்படும் என கூறினார்.மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக நேர்ந்தால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அரசியல் சுற்றுவட்டாரங்கள் பேசி வருகின்றனர்.