மின் கட்டணம் உயர்வு!! விளக்கம் அளித்த மின்சார வாரியம் வெயிட்ட தகவல்!!
இந்த மாதத்தில் இருந்து மின் கட்டணம் உயர்வதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பல பொருட்களில் விலை உயர்ந்து வருகிறது. மேலும் அத்தியவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனையடுத்து தமிழகத்திலும் பல பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது என்ற தகவல் மக்களை மீண்டும் கவலையடைய செய்யதுள்ளது. ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி முதல் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வீடுகளில் ஆண்டுக்கு 3600 ஆயிரத்து 600 யூனிட் மேல் மின்சாரம் படுத்தும் வீட்டிற்கு வணிக நிறுவங்களுக்கு உயர்த்தப்பட்டது போன்று வசூலிக்கப்படும் என தகவல் இணையத்தில் வந்திருந்தது. இதனை உண்மை என்று மக்கள் நினைத்து கண்டனம் தெரிவித்து வந்தார்.
மேலும் இது குறித்து விளக்கம் அளித்த மின்சார வாரியம் அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளது. அதனையடுத்து எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தினாலும் அதிக கட்டணம் வசூளிக்கப்பட்டாது என்று அதிகாரப்பூர்வாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.