ஜிஎஸ்டி விலக்கு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு

0
108

ரூபாய்.40 லட்சம் மேல் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி கட்ட தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. முந்தைய வரியில் 20 லட்சம் மேல் வணிகம் செய்தவர்களுக்கு வரி கட்டத் தேவையில்லை என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1.5 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி ஒரு சதவீத வரி மட்டுமே செலுத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் பெரும்பாலான பொருட்களின் எண்ணிக்கை மீதான வரி விகிதம் குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தற்பொழுது ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 230 பொருட்களின் மீதான வரியில், 200 பொருட்கள் மீது வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீடு வசதி துறைகளுக்கு குறிப்பிடத் தகுந்த நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது அதற்கு 5% வரி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மிகக் குறைந்த விலையில் வீடுகள் மீதான ஜிஎஸ்டி 1% மாக குறைக்கப்பட்டுள்ளது. ஜி எஸ் டி துவங்கப்பட்டதிலிருந்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பானதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தொடக்கத்தில் 65 லட்சம் மக்கள் வரி செலுத்தி வந்த நிலையில், தற்போது 1.74 கோடி மக்கள் வரி செலுத்தி வருவதாக கூறினார்.ஜி எஸ் டி யில் உள்ள அனைத்து நடைமுறைகளும் முழுமையாக தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 கோடி ஜிஎஸ்டி தாக்கல் ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு 131 கோடி இ-வே பில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளார்.