ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

0
169

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்!

உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி செய்வது என்று காணலாம். ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிகம் தலைசுற்றல் ஏற்படும் மயக்கம் ஏற்படும் இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

பீட்ரூட் இதில் நம் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து பாலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம் அதிகம் கொண்டுள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடல் எடை சீராக வைத்துக் கொள்பவர்கள் பீட்ரூட் உணவுகளுடன் சேர்த்துக் கொள்வது நன்மை கிடைக்கும்.

கேரட் இதில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் கே 1 மற்றும் மினரல்ஸ் ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.

ரத்தம் அதிகமாக சுரப்பதற்கும் மற்றும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

மாதுளை இதில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது . மாதுளை பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை அதிகம் உட்கொள்வதினால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது .

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது மற்றும் ரத்தம் உறைதலை தடுக்க உதவுகிறது. 100 கிராம் பீட்ரூட் 100 கிராம் மாதுளை பழம் 100 கிராம் கேரட் மற்றும் சிறிதளவு தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்து காலை நேரங்களில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது மற்றும் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.