Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்களிடையே அதிகரித்து வரும் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது.இதை தவறாமல் பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூனைக்காலி விதை – 50 கிராம்
2)தண்ணீர் விட்டான் கிழங்கு – 50 கிராம்
3)சீந்தில் பொடி – 50 கிராம்
4)நாட்டு மாட்டு பால் – ஒரு கிளாஸ்
5)தேன் – இரண்டு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

1.நீங்கள் முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பூனைக்காலி விதை மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இவை நாட்டு மருந்து கடை அல்லது சித்த’வைத்திய சாலையில் கிடைக்கும்.

2.பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3.பிறகு சீந்தில் பொடி 50 கிராம் அளவிற்கு வாங்கி அரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

4.அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் நாட்டு மாட்டு பால் ஊற்றி குறைவான தீயில் பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

5.அதன் பிறகு ஒரு கிளாஸ் எடுத்து அரைத்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டுக் கொள்ளுங்கள்.

6.அதன் பிறகு காய்ச்சிய பாலை அதில் ஊற்றி தேவையான அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த பாலை தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் விரைவில் ஆண்மை பெருகும்.

தேவையான பொருட்கள்:-

1)பூனைக்காலி விதை – 100 கிராம்
2)பாதாம் பருப்பு – 50 கிராம்
3)முந்திரி பருப்பு – 50 கிராம்
4)வேர்க்கடலை பருப்பு – 50கிராம்
5)பால் – ஒரு கிளாஸ்
6)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

1.முதலில் பூனைக்காலி விதை,பாதாம் பருப்பு விதை,முந்திரி விதை மற்றும் வேர்க்கடலையை தனி தனியாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு இவற்றை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் மைய்ய அரைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும்.

3.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

5.பின்னர் தயாரித்து வைத்துள்ள உருண்டை ஒன்றை பாலில் போட்டு கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

Exit mobile version