ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை!

0
113
Increased death toll due to earthquake in Haiti!

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை!

வட அமெரிக்கக் கண்டத்தில், கரீபியன் கடலில் உள்ள சிறிய தீவு நாடான ஹைதி உள்ளது. இந்த தீவு நாட்டில் தென்மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கடற்கரை நகரமான ஹைதி முழுவதும் குலுங்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்தபடி தெருவில் ஓடினார்கள். நகரம் முழுவதும் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை முதலில் 300 என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று மாலை வரை 700 என்ற கணக்கில் இருந்தது குறிப்பிடத் தக்கது.

தற்போது வரை அங்கே உயிரிழப்பு 1294 ஆக அதிகரித்துள்ளது என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். 2800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து துரித நிலையில் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு ஹைதியில் அவசரகால நிலையை பிரதமர் ஏரியல் பிரகடனப்படுத்தி உள்ளார்.

இயற்கையின் பிடியில் நாம் எதுவுமே செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பாதிப்புகள் எண்ணிலடங்கா வகையில் மனித சமுதாயத்திற்கு தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. கடந்த மாதங்களில் அதிபர் கொலை செய்யப் பட்டது தொடர்பாக அங்கு ஏற்கனவே பல கலவரங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் குறிப்பித் தக்கது.