Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

increased-electricity-demand-during-the-summer-important-announcement-made-by-minister-senthil-balaji

increased-electricity-demand-during-the-summer-important-announcement-made-by-minister-senthil-balaji

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின்வாரிய துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மின்கட்டண உயர்வு மற்றும் மின் நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிக அளவு மின்சாரம் தேவை இருக்கின்றது.

இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 17,196 மெகா வாட் மின்சாரம் தேவைப்பட்டதாகவும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 18௦53  மெகா வாட் உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மாதம் இதற்கும் கூடுதலாக 18,500 வரைக்கும் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மின்சார தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதனை சமாளிக்கும் விதமாக மின்வாரியம் தயாராக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கூடிய விரைவில் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்படும். தமிழகத்தின் 100 இடங்களில் மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்வதற்கான நிலையங்கள் அமைக்கப்படும்.

அதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் ஏப்ரல் மாதத்திற்குள் இவை  அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி தற்போது 12, 11, 10-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதினால் மின் துண்டிப்பு ஏற்படாது எனவும் மின்வாரியத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version