Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்து காணப்பட்டாலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆக்ஸிஜன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.டிசம்பரில் ஏற்பட்ட உயிர் இழப்பை விட ஜனவரியில் உயிர் இழப்பின் விகிதம் குறைந்துள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. பூஸ்டர் டோஸூக்கு தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version