தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி!

0
106
Corona touching the top! The death toll has reached 32 lakh!

தமிழகத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடு! எல்லையை மீறும் கொரோனா பலி!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி கர்நாடகவில் 14 நாட்களுக்கு முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல ஆந்திராவிலும் நண்பகல் 12 மணிக்கு மேல் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

அடுத்ததாக நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு பல மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருவதால் அடுத்ததாக நமது இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,அந்தவகையில் தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,956 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் ஓர் நாளில் 6,150 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,23,258 ஆக உள்ளது.இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 10,90,338  ஆக உள்ளது.24 மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122  ஆக உள்ளது.