இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 8 நாட்களில் 75,000 பாதிப்பு!

0
127

இந்தியாவில் கடந்த 8 நாட்களில் 75,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்ட நாள் ஜனவரி 30. அன்றிலிருந்து மார்ச் 15 வரை 100 பாதிப்பு மட்டுமே இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 15க்கு பின் 64 நாட்களில் அதனுடைய பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது.

ஒரு லட்சத்தை தொடவே 64நாட்கள் ஆன நிலையில், கடந்த மே மாதம் 4-வது கட்ட ஊராடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் இரண்டாம் தேதி வரை 2 லட்சம் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்குக்கு பின் மேலும் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மாநில அரசுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த 8 நாட்களில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகபட்ச பாதிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது மொத்த மதிப்பு 2 லட்சத்து 66 ஆயிரத்து 698 ஆக இருக்கும் நிலையில், 1லட்சத்து 29 ஆயிரத்து 815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 7,466 பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.