அதிகரித்து வரும் கொரோனா! பீதியில் மக்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது.
நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.
இந்த வைரஸ் இந்தியாவில் முன்னதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் பீகாரில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான புத்த கயாவில் இந்த வாரம் நடைபெறும் தலாய்லாமா சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாய்லாந்து மற்றும் மியான்மரில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அதில் 33 பேர் கொண்ட குழுவினருக்கு கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் மியான்மரை சேர்ந்தவர்.மீதமுள்ள நான்கு பேரும் தாய்லாந்து சுற்றுலா பயணிகள்.தொற்று பாதித்துள்ள 5 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது.
அவர்கள் அனைவரும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புத்த கயா ரெயில் நிலையத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.இங்கிலாந்து இருந்து மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிற்கு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு வந்த பெண் பயணி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.