Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்ற நிலையிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இப்படியான சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24 கோடியே 91 லட்சத்து ஆயிரத்து 984 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 84 லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து 441 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

நோய் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில் 22 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 705 பேர் முழுமையாக குணம் அடைந்து இருக்கிறார்கள். இருந்தாலும் நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் இதுவரையில் 50 லட்சத்து 44 ஆயிரத்து 338 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Exit mobile version