Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

”ஓட்டுப்போட்டால் தினமும் ஒருலிட்டர் புதுச்சேரி பிராந்தி வழங்குவேன்” -இது வேற லெவல் தேர்தல்..!

எனக்கு ஓட்டுப்போட்டால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தினமும் ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி வழங்குவேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பேசி அனைவரையும் அதிர்ச்சி கொடுத்தார்.

நாளுக்கு நாள் தமிழக தேர்தல் களத்தில் நகைப்புக்கும், வியப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் வாக்காளர்களின் பிரச்சாரம் அமைகிறது. நேற்று முன் தினம் தனக்கு ஓட்டு போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்க, அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக அந்தியூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் பாண்டிச்சேரி பிராந்தி வாங்கிக் கொடுப்பதாக பகீர் வாக்குறுதி அளித்து அனைவரைக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். என எண்ணிக் கொண்டு
கண்களைக் கூசும் மஞ்சள் சட்டையுடன், கூலிங் கிளாஸ், கழுத்தில் மாலை உள்ளிட்ட கெட்டப்புடன், தனக்கு என எந்தவித ஆதர்வாளர்களும் இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தான் அந்தியூர் தொகுதியின் சுயேடை வேட்பாளர் ஷேக் தாவூத். தையல் கடை வைத்திருக்கும் ஷேக் தாவூத் கடந்த 40 ஆண்டுகளில் 9 தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒருமுறை கூட வெற்றிப்பெற்றதில்லை. மனம் தளராமல் போட்டியிடும் தாவூத் இம்முறை தனது மனக்குமுறலை வெளிகாட்டியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக 9 தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிடும் தான் ஒருமுறை கூட வெற்றிப்பெற்றதில்லை என்றும் சோற்றுக்கே திண்டாடுவதாகவும் கூறினார். இம்முறை தனதுக்கு வாக்களித்தால் குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்குவேன் என்றும், முதியோர் உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்குவேன் என்றும், ரூ.25 ஆயிரம் மதிப்புடைய ஷோபா வழங்குவேன் என்றும், கூட்டுறவி வங்கியில் உள்ள ரூ.10 லட்சம் வரையிலான கடன்ங்களை தள்ளுபடி செய்வேன் என்றும் கூறினார். இதுமட்டுமின்றி, விவசாயிகள் இழப்பு ஏற்பட்டதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும், விவசாயிகளை நம்ப வேண்டாம் என்றும், அவர்களின் கடனை அரசு ஏன் தள்ளுபடி செய்ய வேண்டுமென பொங்கி எழுந்தார்.

ஒருகட்டத்தில் குடும்பத் தலைவிகள் தங்களுடைய அண்ணனிடமோ, தம்பியிடமோ, கள்ளக்காதலர்களிடமோ பேசுவதற்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் “ஓப்போ” போன் வாங்கிக் கொடுப்பேன் என குபீர் வாக்குறுதியை அளித்தார். இதுமட்டுமின்றி இறுதியாக 18 வயது நிரம்பிய இளைஞர்கள் வேலை மற்றும் படிப்பு சுமையால் கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு புதுச்சேரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிராந்தியை தினமும் ஒரு லிட்டர் வழங்குவேன் எனக்கூறி அங்கிருந்தவர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்டார்.

Exit mobile version