Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

#image_title

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி திமுக கட்சியால் விரைவில் உடைந்துவிடும்” என்று பேட்டி அளித்தார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது உள்ள ஊழல் வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதாக தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் உறுதியாக கூறியிருக்கின்றார்.

1989ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தக்கார் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது இரண்டு நாட்களில் 89 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதே போல தற்பொழுது 140 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்றால் அவர்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் சென்று அமளியில் ஈடுபட்டனர். அது தான் எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு காரணம்.

ஹிந்தி திணிப்பு குறித்து தற்பொழுது திமுக கட்சி பேசி வருகையில் இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் பேச்சுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சநாதனம் தொடர்பான கருத்துக்களை திமுக கட்சி எழுப்பி வருவதால் திமுக கட்சியால் இந்தியா கூட்டணி உடைந்து விடும்.

சமீபத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்தது ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி கட்சியின் தேசிய தலைமைக்கு அறிக்கை தயாரித்து அனுப்பப்படும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட வர வேண்டும் என்பது தான் பாஜக கட்சியனரின் ஆசை. ஆனால் தேசிய அளவில் பல முக்கியமான அலுவல்கள் இருக்கின்றது. அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட வர முடியவில்லை. தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியில் 75 சதவீதம் மத்திய அரசின் பங்கு இருக்கின்றது” என்று அண்ணாமலை அவர்கள் கூறினார்.

Exit mobile version