இந்தியா பாரத் பிரச்சனை!!! படத்தின் பெயரை மாற்றிய நடிகர் அக்சய் குமார்!!!

0
149
#image_title

இந்தியா பாரத் பிரச்சனை!!! படத்தின் பெயரை மாற்றிய நடிகர் அக்சய் குமார்!!!

சமீப நாட்களாக இந்திய நாட்டில் நிலவி வரும் இந்தியா பெயர் மாற்றம் குறித்தி பிரச்சனை காரணமாக நடிகர் அக்சய் குமார் அவர்கள் அவருடைய திரைப்படத்தின் பெயரை தற்பொழுது மாற்றியாள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் இந்தியா பெயர் மாற்றம் பிரச்சனையும் ஒன்று. இந்திய நாட்டுக்கு தற்பொழுது உள்ள இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் பாரதம் என்று பெயர் வைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றது.

இந்த இந்தியா பெயர் மாற்றம் குறித்து ஒரு தரப்பினர் ஆதரவாகவும் ஒரு தரப்பினர் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து தேசபக்தி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அக்சய் குமார் அவர்கள் தான் தற்பொழுது நடித்துள்ள திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளார்.

நடிகர் அக்சய் குமார் தற்பொழுது இயக்குநர் டினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் உருவாகியுள்ள மிஷன் ராணிகன்ஸ் தி கிரேட் இந்தியன் ரெஷ்கியூ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை பரிணிதி சோப்ரா அவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது இந்தியா பாரத் பிரச்சனை நிலவி வருகின்றது. இதன் காரணமாக நடிகர் அக்சய் குமார் அவர்கள் தனது திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளார். அதாவது தற்பொழுது மிஷன் ராணிகன்ஸ் தி கிரேட் இந்தியா ரெஷ்கியூ என்று முன்னர் பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் அக்சய் குமார் அவர்கள் திரைப்படத்தின் டைட்டிலில் உள்ள இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று வைத்துள்ளார்.

அதன்படி இந்த திரைப்படம் மிஷன் ராணிகன்ஸ் தி கிரேட் பாரத் ரெஷ்கியூ என்று மாற்றப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் எக்ஸ் பக்கத்தில் நடிகர் அக்சய் குமார் அவர்கள் பதிவிடும் டுவீட் பதிவுகளில் எல்லாம் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிட்டு வருகிறார். அதே சமயம் நடிகை பரிணிதி சோப்ரா அவர்கள் இந்தியா என்றே பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.