இந்தியா – சீனா பேச்சு வார்த்தை தொடக்கம்! நிரந்தர தீர்வு கிடைக்குமா.?

0
139

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லைப் பகுதியில் அடிக்கடி எல்லை குறித்த பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சீனா கூறியுள்ளது.

இரு நாட்டு எல்லையான லடாக் பகுதியில் இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே அடிக்கடி எல்லை பிரச்சினை பெரும் சிக்கலாக மாறிவருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் சீனா இந்திய ராணு அதிகாரிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகள் தரப்பில் 14 அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய தரப்பில் முக்கிய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு சென்று சீன லெப்டினன்ட் ஜெனரலுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன்மூலம் இந்தியா- சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் ஐநா’வின் மிஷனுக்காக ஆப்பிரிக்காவில் முக்கிய பொறுப்பு மற்றும் ஜம்முவில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

டெல்லி, சிங்கப்பூர் போன்ற இடங்களில் படிப்புகளை முடித்துள்ள ஜெனரல் ஹரீந்தர் சிங் மிகவும் நேர்த்தியான இராணுவ அதிகாரி என்கிற பெயரையும் பெற்றவராவார். இவரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு நட்புறவும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.