இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா!

0
119
India came in second! Corona increasing day by day!

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா!

சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிப்பதற்கே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிவேகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால் 7 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கை போடப்பட்டது.

சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் ரெம்டிசிவர் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது.அத்தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படும் என மக்கள் அத்தடுப்பூசியை போட முன்வரவில்லை.ஆனால் அத்தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்  படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதனையடுத்து முதலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரெம்டெசிவிர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதற்கடுத்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அத்தடுப்பூசி செலுத்தப்பட்டது.இன்று 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு அத்தடுப்பூசி நாடு முழுவது செலுத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.ஆனால் கொரோனா கோவிட்ஷீல்டு தடுப்பூசிக்கு அதிக அளவு தட்டுப்பாடு காணப்படுவதால் அந்த திட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

சுகாதாரத்துறை 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள்,உயிரிழந்தவர்கள்,குணமடைந்தர்வர்களின் பட்டியலை வெளியிடும்.அந்தவகையில் தற்போது 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 402,110  ஆக உள்ளது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,522  ஆக உள்ளது.தற்போது இந்தியா உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.