இந்திய-சீன எல்லைகளில் இருநாட்டு இராணுவமும் படைகளை விலக்கி வரும் வேளையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக லடாக் பகுதிக்கு இன்று வந்தார். பின்னர் முப்படைத் தளபதிகளுடன் வாகனத்தில் சடாக்னா ராணுவ பகுதி முகாமுக்கு சென்று அங்குள்ள துப்பாக்கிகளை இயக்கி பார்த்தார். இராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் குதிப்பது பற்றிய ஒத்திகை செய்து காட்டினர்.
இதையடுத்து ராணுவ வீரர்களிடையே பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியா-சீனா எல்லை சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தீரும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உலகிற்கே அமைதியை எடுத்துக்காட்டிய நாடு, ஒரு அடி நிலத்தை கூட விட்டுத்தர முடியாது. நாம் எந்த நாட்டையும் தாக்கியது கிடையாது, எந்த நாட்டின் நிலத்தையும் பறித்தது கிடையாது. உலகமே ஒரே குடும்பம் என்ற நிலைப்பாட்டை கொண்டது இந்திய நாடு என்று தெரிவித்தார்.
சீன படைகள் பிங்கர் பகுதியில் மட்டும் படைகளை விலக்கிக் கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.