Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய-சீனா எல்லையில் தொடர் பதற்றம்! இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

India China Foreign Minister Meeting

India China Foreign Minister Meeting

இந்திய-சீனா எல்லையில் தொடர் பதற்றம்! இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியா மற்றும் சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை இன்று சந்தித்துள்ளார்.

தஜிகிஸ்தானின் துஷன்பே நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டுக்கு இடையே, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்யியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மூத்த ராணுவ தளபதிகள் இடையேயான சந்திப்பை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யியை நேரில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version