Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 “இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!! 

"India" coalition opposition parties in Manipur for 2 days inspection!!

"India" coalition opposition parties in Manipur for 2 days inspection!!

“இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இன்னும் அங்கு  வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்கள்.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் நாட்டிற்கு மிக பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து மழைக் கலக் கூட்டத் தொடரில்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து அமளியில் ஈடுப்பட்டு வருகிறது. மேலும்  மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள்  பிரதமர் மோடி இடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகிறது. மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை  எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தது.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.கள். கருப்பு நிற உடை அணிந்து வந்து எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனியடுத்து இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் கள நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய் “இந்தியா” கூட்டணி மணிப்பூர் செல்ல உள்ளது. மேலும் இதில் 2 குழு 20 க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று ஆய்வு நடத்த உள்ளர்கள.

அதனை தொடர்ந்து அந்த பயணம் இன்றும் நாளையும் நடைபெற்றதுள்ளது. இவர்கள் பாதுகாப்பு முகாமில் தங்கவைத்துள்ள மக்களை சந்திக்க உள்ளர்கள். அதனையடுத்து இந்தியா கூட்டணியில் திமுக வை சென்ற எம்.பி. கனி மொழியும் மணிப்பூர் செல்ல உள்ளார்.

Exit mobile version