Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்வீட் நியூஸ்! இந்தியாவில் மளமளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை!

நாட்டின் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான நோய்த் தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67084 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது நேற்றைய பாதிப்பை விட 6 சதவீதம் குறைவு என்று சொல்லப்படுகிறது. நேற்றையதினம் பாதிப்பானது 71,365 ஆக இருந்த சூழ்நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,24,78,060 ஆக அதிகரித்திருக்கிறது. நாட்டில் நோய்த்தொற்று பரவல் விகிதம் 4.44 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,241 பேர் பலியாகியிருக்கிறார்கள்.இதன் காரணமாக, ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 5,6,520 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,67,882 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, ஒட்டுமொத்த குணமடைந்தவரின் எண்ணிக்கை 4,11,80,751 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 1,02,019 பேர் சிகிச்சையிலிருக்கிறார்கள். நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 7,90,789ஆக இருக்கிறது.

Exit mobile version