Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டின் 2வது நாளாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய நோய்த்தொற்று தற்போது வரையில் உலக நாடுகளிடையே பீதியை கிளப்பி வருகிறது.

சீனாவில் இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிய புதிதில் அந்த நாட்டில் மட்டுமே பாதிப்பை உண்டாக்கி வந்தது. ஆனால் அதன் பிறகு அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நோய் தொற்று.

அதிலும் உலக வல்லரசு நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு அமெரிக்காவை தற்போதுள்ள இடத்திலிருந்து கீழே இறக்க வேண்டும் என்று சீனா வேண்டுமென்றே செய்த சதிச்செயல் தான் இந்த நோய்த்தொற்று பரவல் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள்.

முதலில் பரவலாக இந்த விஷயம் பேசப்பட்டு வந்தாலும் கூட சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் இந்த நோய்த்தொற்று சீனாவில் தான் கண்டறியப்பட்டது என்ற உண்மை உறுதியானது.

இந்த நிலையில், இந்திய அளவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,380 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றுமுன்தின பாதிப்பான 1,247 மற்றும் அதற்கு முந்தைய நாள் பாதிப்பான 2,607 உள்ளிட்ட பாதிப்பை விட அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இந்தியாவில் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,30,49,974 என அதிகரித்திருக்கிறது.

ஆகவே கடந்த 24 மணி நேரத்தில் நோய்தொற்று பாதிப்பிலிருந்து 1,234 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் குணமடைதோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,14,479 என அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 13,433 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய் தொடர் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 56 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டில் இந்த நோய் தொற்று காரணமாக. பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5, 22,062 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் நாடுமுழுவதும் இதுவரையில் 187,7,8111 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது

Exit mobile version