Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ச்சி! இந்தியாவில் 3000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் பல முக்கிய வல்லரசு நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதிலும் அமெரிக்கா இதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில், இருந்து வருகிறது.

ரஷ்யா ,இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப் பெரிய பொருளாதார நாடுகளும் கூட இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாமல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்து தொடர்ந்து 2 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது.

அப்படி அப்படியிருந்தும் கூட அங்கு நோய்த்தொற்று பரவல் தொடர்பான எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை வைத்து உலகளவில் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள் என்றுதான் கருதத் தோன்றுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தின பாதிப்பான 2,483 மற்றும் நேற்றைய பாதிப்பான 2,927 உள்ளிட்ட எண்ணிக்கைகளை விட அதிகமாகும்.

இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,68,799 என அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2,563 பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஆகவே இந்தியாவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4.25 லட்சத்தை கடந்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 16,980 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, உயிரிழந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,23,693 என அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் நாடுமுழுவதும் இதுவரையில் 188,40,75,453 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோரியிருக்கிறது.

Exit mobile version