இந்தியா இது வரை 100 கோடி தடுப்பூசி செலுத்தி உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதன் முதலில் சீனா 100 கோடி தடுப்பூசி உலகின் முதல் நாடு என சாதனை படைத்தது.
கடந்த ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் இது வரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,உத்திரபிரதேசம் நாட்டின் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாள் அன்று 2 கோடியே 50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது உலகிலேயே ஒரே நாளில் மிக அதிகமாக போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை ஆகும்.
முன்னதாக சீனா ஒரே நாளில் 2 கோடியே 47 லட்சம் தடுப்பூசிகள் போட்டு உலக சாதனை படைத்திருந்தது. இந்தியா இந்த சாதனையை முறியடித்துள்ளது.
100 கோடி தடுப்பூசிகள் போட்டு சாதனை படைத்தாலும், இந்தியாவில் இதுவரை 51 % மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைந்து விட்டது, இது வரை 21 % பேர் மட்டுமே இரண்டாம் தவணை செலுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்பிருக்கும் வேளையில் இது போன்ற விஷயங்கள் சற்று கலங்க வைப்பதாகவே உள்ளது.