Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை இந்தியா குளோபல் வீக் 2020 மாநாடு; சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி உரை!! இந்தியாவின் வணிகம் உயர வாய்ப்பு!

உலக நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை ஈர்ப்பதற்காக இந்தியா சார்பில் இங்கிலாந்தில் வரும் ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வீடியோ கான்பிரன்ஸ் வழியாக இந்தியா குளோபல் வீக் 2020 என்ற பெயரில் மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்தியா குளோபல் வீக் 2020″ என்ற பெயரில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.

கொரோனாத் தொற்றில் பல உண்மைகளை சீனா மறைத்ததால், சீனாவிடம் இருந்து பல உலகநாடுகள் வணிக ஒப்பந்த்ததை விலக்கி கொள்வதாக கூறிய நிலையில், இந்தியாவுக்கு ஏராளமான முதலீட்டு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதனால் இந்த “இந்தியா குளோபல் வீக் 2020” கருத்தரங்கு முககியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

இந்தியா சார்பாக இந்த நிகழ்ச்சியில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இங்கிலாந்து தரப்பில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்ற உள்ளார்.மேலும்வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், உள்துறை செயலாளர் பிரிதி படேல், சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் மற்றும் சர்வதேச வர்த்தக செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இந்தியா இங்கிலாந்து தூதரக பொறுப்பாளராக இருக்கும் கைத்ரி குமாரும் இதில் பங்கேற்க உள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் 250க்கும் மேற்பட்ட வணிகர்களும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளரும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version