“இந்த விஷயத்தில் இந்தியாதான் பெஸ்ட்”! எலான் மஸ்க் எதைப் பற்றிச் சொல்கிறார்?

0
62
"India is the best in this matter"! What is Elon Musk talking about?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் பிளேசில் இருப்பவர் “ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா” நிறுவனங்களின் தொழிலதிபரான “எலான் மஸ்க்”. தன்னுடைய அபார வளர்ச்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டதாகவும், ஆனால் கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவு அடயவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

எக்ஸ் பக்கத்தில் உள்ள ஒரு பதிவிற்கு, அதாவது, “லேக் கவுண்டி, கலிபோர்னியாவில் வெறும் 25 ஆயிரம் வாக்குகள் 19 நாட்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு வருகின்றது” என்ற பதிவிற்கு தான் எலான் மஸ்க் ரிப்ளை செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமீபகமாக நடந்து முடிந்தது. இதில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தார்கள். இதில் 64 கோடி பேர் அவர்களின் வாக்கையும் பதிவிட்டனர். வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் பதிவானது. ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2000-வது ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அர்ஜென்டினாவில் நடைபெற்ற தேர்தலில் 6 மணி நேரத்தில் 2.7 கோடி வாக்குகள் என்னப்பட்டுள்ளன. ஆனால் கலிபோர்னியாவில் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை. நம்முடைய முறை உடைந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

நவம்பர் 5, 2024-இல் நடந்த அதிபர் தேர்தலில் அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ள கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு வருகிறது. தேர்தல் முடிந்து அடுத்த நாளே எண்ணத் தொடங்கி இருந்தாலும், மேலும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ளது. காரணம், கலிஃபோர்னியாவில் அதிகமாக அஞ்சல் வாக்குகள் பதிவாகும். அதில் இருக்கும் கையெழுத்துகளைச் சரிபார்ப்பது, வரிசைப்படுத்துவது என அனைத்தும் முடிந்த பின்பே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தேர்தல் பணிகளையும் தேர்தல் ஆணையமே கண்காணிக்கும். ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை மாகாணம் மற்றும் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் தேர்தல் நடைபெறும். இதற்குத் தனித்தனி சட்டங்கள் பயன்படுத்துவதால் தேர்தல் பணி தாமதமாகக் காரணமாக உள்ளது. இதனால்தான் பல பேர் கடுமையாக அவர்களது விமர்சனங்களைக் கூறி வருகின்றனர்.

என்னதான் நம் நாட்டைப் பற்றிப் பல விமர்சனங்கள் வந்தாலும், நம்மிடம் இருக்கும் நன்மைகளைப் பற்றி இதைப் போல் ஒருவர் கூறும் போது சற்று மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றது என்பது சில மக்களின் கருத்தாக உள்ளது.