Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும்!! சீமான் ஆவேச பேட்டி!!

India must be divided into two !! Seaman furious interview !!

India must be divided into two !! Seaman furious interview !!

இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும்!! சீமான் ஆவேச பேட்டி!!

கொங்கு நாடு தனி மாநில விவகாரம் தொடர்பாக  சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:  மத்திய அரசிடம் நாங்கள் ஏராளமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்கள் கேட்காத கோரிக்கையான கொங்கு நாட்டைதனி மாநிலமாக்க   முயற்சிக்கிறது. பொதுவாக மாநிலங்கள்  மொழி, இனம், நிலம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது ஜாதிய அடிப்படையாக கொண்டு  கொங்கு நாடு என பிரிக்க முயற்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி பிரித்தால் இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்க வேண்டும்.

நாங்கள் கேட்பது எல்லாம் மாநிலதிற்கு நான்கு தலைநகரங்கள்  வேண்டும்  என்பதுதான். நான் கூறியதை தான்  ஜெகன் மோகன் ரெட்டி, மமதா பானர்ஜி பேசுகிறார்கள். உண்மையில் பார்க்கப்போனால் நம் இந்தியாவை தென்னிந்தியா, வட இந்தியா என உலக நாடுகளின் பிரிவினையின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலமாக்கினால் பா.ஜ.க. சுலபமாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தான் நிலைமை.

கொங்கு மண்டலம்  தனி மாநிலப் பிரிவினையை தொடங்கினால் இந்தியாவை இரண்டு நாடா ஆக பிரியுங்கள் என்று நான் இறங்குவேன். அனைவரும்  பூனைக்கு மணி கட்டுவது யார் என காத்திருக்கிறார்கள். நான் தெருவில் இறங்கி விளையாட தொடங்கவா? இவ்வாறு சீமான் கண்டம்  எழுப்பி உள்ளார்.

Exit mobile version