Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகின் பொருளாதார சக்தியாக வேகமாக வளர்ந்து வரும் இந்தியா! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை எழுதி இருக்கிறது. அதில் சர்வதேச அளவில் நிலவி வந்தாலும் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் உலகளவில் ஏற்பட்டிருக்கின்ற எதிர்பாராத குழப்பங்கள் காரணமாக, அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்திருக்கிறது இந்த தாக்கத்தின் காரணமாக சில துறைகள் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.

ஆனாலும் கூட அதையும் மீறி இந்தியா தன்னுடைய நிலையை தக்கவைத்து முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதார சரிவு என்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சிறப்பாக பயணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்திருக்கிறது இது விலைவாசி உயர்வுக்கு காரணமாக, அமைந்திருக்கிறது. சர்வதேச வர்த்தக போக்குவரத்தில் உண்டாகி இருக்கின்ற தடைகளை இதற்குக் காரணம் அதேசமயம் இந்த சிக்கலை சீரமைத்து தேவையை ஈடு கட்டும் பணியில் அரசு உடனடியாக ஈடுபட்டதன் காரணமாக, நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் நடப்பு பற்றாக்குறை என்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து அமையும் கச்சா எண்ணெய் விலை பேரளுக்கு 15 டாலர் என்ற விலையில் இருந்தால் நடப்பு பற்றாக்குறை 2.3% 120 டாலர் என்ற உச்சத்தில் இருந்தாலும் நடப்பு பற்றாக்குறை 2.8% தொடும் என்று ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில் பொருளாதார பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கச்சா எண்ணெயின் விலையின் உயர்வு பல நாடுகளை பாதித்திருக்கின்ற நிலையில், அதிய அரசியல் தேவைக்கான உணவு பொருள்களுக்கும் ஐரோப்பிய நாடுகள் கடும் தட்டுப்பாட்டை சந்தித்திருக்கின்றன.

அது ஒரு பருவமடை காலம் தொடங்கி இருப்பதால் நாட்டில் வேளாண் தொடர்பான நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று கிராமப்புற தேவை உயர்வு காணலாம். இது பொருளாதார முயற்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

Exit mobile version