Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா-பாகிஸ்தான் இடையே போருக்கு வாய்ப்பா? இம்ரான்கான் என்ன சொல்கிறார்

Opportunity-for-India Pakistan-war-Imran-khan-Says-News4 Tamil Latest World News in Tamil

Opportunity-for-India Pakistan-war-Imran-khan-Says-News4 Tamil Latest World News in Tamil

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டபிரிவை இந்தியா நீக்கியதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடைபெறுமா என்ற அச்சமும் இரு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த போர் பதற்றத்தை தணிக்குமாறும்,இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 லட்சம் ராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இயங்கவில்லை. அங்கு நடைபெறும் செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றன.

80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன் எப்போதும் இல்லாதது ஆகும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பது தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று பதற்றத்தை அதிகரிக்கும் தோணியில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version