நாட்டில் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

0
124

நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக நாள்தோறும் மத்திய மாநில அரசுகள் தனித்தனியே நோய் தோற்று குறித்த விபரங்களை வெளியிட்டு வருகின்றன மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை தினந்தோறும் நோய் தொற்று பாதிப்பு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் மற்றும் நோய் தொற்று பரிசோதனை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதே போல மத்திய அரசு சார்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் நோய்களிலிருந்து விடுபட்டோர் , நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் பரிசோதனை செய்யப்பட்ட விவரம் உள்ளிட்டவற்றை தனித்தனியே வெளியிட்டு வருகின்றன.

அதனடிப்படையில், இன்றைய தினம் இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1233 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,23,215 என அதிகரித்திருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் 108 பாதிப்பிலிருந்து 1876 பேர் விடுபட்டு இருக்கிறார்கள் இதனால் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,87,410 என அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 14,704பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலும் நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 5,21,101 என அதிகரித்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 26,34,080 பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 183,82,41,743 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.