Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐய்யய்யயோ ஆனந்தமே! நாட்டில் 2வது நாளாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பரவலின் 3வது அலை பாதிப்பு சற்று குறைய தொடங்கியிருக்கிறது, சென்ற வாரங்களில் மளமளவென உயர்ந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாக கொஞ்சம், கொஞ்சமாக, குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 2,86,384 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டான நிலையில், நேற்று இந்த எண்ணிக்கையில் சற்றேறக்குறைய 35000 குறைந்து 2,50,250 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், 2வது நாளாக இன்றும் இந்த நோய்த் தொற்று பாதிப்பு சற்றே குறைந்து இருக்கிறது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற தகவலின் அடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு நோய் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பின் காரணமாக, ஒரே நாளில் 870 பேர் பலியாகி இருக்கிறார்கள், இந்த நோய் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 3,35,939 பேர் விடுபட்டு இருக்கிறார்கள். நோய்த்தொற்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,04, 333 என இருக்கிறது.

நோய்த்தொற்று பாதிப்பின் விகிதம் 13.9 சதவீதமாக இருக்கிறது, நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 164.16 கோடியாக அதிகரித்திருக்கிறது. நாட்டில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 74 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறது

Exit mobile version