கடந்த 2019 ஆம் வருடம் சீன நாட்டின் வூகான் நகரில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
அதிலும் இந்த நோய் தொற்றினால் உலக வல்லரசாக வளர்ந்து வரும் அமெரிக்கா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமல்லாமல் ரஷ்யா, இங்கிலாந்து,போன்ற உலக வல்லரசு நாடுகள் இந்த நோய் தொற்றினால் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகினர்.
அந்த விதத்தில் 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியது இந்த நோய்த்தொற்று
தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு பார்த்தனர். ஆனாலும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் 2020 ஆம் வருடம் மார்ச் மாதவாக்கில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக, மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியது. அதோடு இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பல கோடி நபர்களுக்கு செலுத்தப்பட்டது இதனால் தற்போது இந்தியாவில் நோய் தொற்று பெருமளவு குறைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 6, 396 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5, 921 ஆக குறைந்திருக்கிறது.
இதன் காரணமாக, ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,29,57,477 என்று உயர்ந்திருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 63,878 என குறைந்திருக்கிறது.
நேற்று ஒரே நாளில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 11,651 என பதிவானது இதுவரையில் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,23,78,721 என்ற நிலையில், உயர்ந்திருக்கிறது.
இந்த நோய் தொற்றினால் உண்டாகும் உயிரிழப்பு சற்றே அதிகரித்திருக்கிறது. 206 பேர் இந்த நோய் தொற்று பலி எண்ணிக்கை இருக்கின்ற சூழ்நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 289 ஆக அதிகரித்திருக்கிறது இதுவரையில் இந்த நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,14,878 என்று அதிகரித்திருக்கிறது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரையில் 1,78,55,66,940 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,62,562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.