Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய்த்தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2வது நாளாக சரிவு!

உலகம் முழுவதும் உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் சொற்று பரவலால் அதிர்ந்து போய் இருக்கின்ற சூழ்நிலையில், அந்த புதிய வகை நோய்த்தொற்று இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இறுதிகட்ட பயணத்தில் இருக்கிறது. இந்த நோய்த்தொற்று பரவல் தற்சமயம் அனைத்து விதத்திலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக இந்த நோய்த் தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்றது.

இந்த சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 350 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 3 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 510 இலிருந்து, 3 கோடியே 46 லட்சத்து 97 ஆயிரத்து 860 ஆக அதிகரித்திருக்கிறது. ஒரேநாளில் நோய்தொற்றுக்கு 202 பேர் பலியாகி இருக்கிறார்கள், நாட்டில் நோய் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்து 434 இல் இருந்து, 4 லட்சத்து 75 ஆயிரத்து 636 ஆக அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 91156 ஆக இருக்கிறது இந்தியாவில் ஒரே நாளில் 7 1973 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாட்டில் குணமடைந்தவரின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 22 ஆயிரத்து 765 இருந்து, 3 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரத்து 768 ஆக அதிகரித்திருக்கிறது. நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் விகிதம் 98.37% என்று சொல்லப்படுகிறது, உயிரிழப்பின் சதவீதம் 1.37 சதவீதமாக இருக்கிறது.

Exit mobile version