Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டில் புதிதாக 811 பேருக்கு நோய் தொற்று பரவல்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய நோய் தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,952பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நோய் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,511 என இருக்கிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 4,41,18,882 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்த நிலையில், தற்போது 13,559 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாடு முழுவதும் இதுவரையில் 2,19,75,22,436 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது நேற்று வரையில் ஒரே நாளில் 70, 678 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version