பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கிறதா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலக்கம்
இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத செயல்களை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தான் தற்போது இந்தியாவின் மீது வித்தியாசமான குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அங்குள்ள உள்ளூர் பிரச்சினை தான் காரணம் என்றும், அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது பொய்யான காரணங்களை காட்டி அந்நாட்டின் மீது போர் நடவடிக்கையை துவக்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.
இந்திய ஆக்கிரமிப்பு என்பது இந்தியாவின் ஒடுக்குமுறை மற்றும் காஷ்மீர் மிருகத்தனத்தின் நேரடி விளைவாகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக இணைப்பின் பாசிச கொள்கைகள் கடுமையான ஆபத்து நிறைந்தவை. இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிப்பதற்கு முன்பாக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும்.
இவ்வாறு பாகிஸ்தானை குறிவைத்து ஒரு தவறான போர் நடவடிக்கைக்கு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து நான் உலகிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவிலான தீவிரவாதத்திற்கு அடிப்படை ஆதாரமாக பாகிஸ்தான் உள்ளதை பெரும்பாலான உலக நாடுகள் உறுதியளித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ள இந்த கருத்து நகைப்புக்குரியது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.