Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடங்கியது இந்தியா vs வங்கதேசம்.. முப்படை பீரங்கி ஹெலிகாப்டர் போர் பயிற்சி!! நடக்கப்போவது என்ன??

India vs Bangladesh started

India vs Bangladesh started

bangladesh: வங்கதேசம் தற்போது  முப்படைய்களுடன் பயிற்சியை தொடங்கியுள்ளது போருக்கு தயாராகி வருகிறதா??

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உள்நாட்டில் எழுந்த போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். மேலும் வங்கதேசத்தில் அவருக்கு அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன் இந்திய மற்றும் வங்கதேசத்தின் இடையே நல்லுறவு இருந்து வந்த நிலையில் தற்போது உள்ள முகமது யூனுஷ் தலைமையில் உள்ள  இடைக்கால அரசாங்கம் அந்த நல்லுறவை குலைத்து வருகிறார்.  தற்போது நமக்கு எதிரி நாடுகளுடன் உறவு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானுடன் உள்ள எல்லை பிரச்னைக்கு உதவியது இந்தியா  பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவு என்பது மோசமாகி வருகிறது.

இந்நிலையில் வங்கதேசம் சிட்டாங்கில் ராணுவப் படை மற்றும் விமானப்படை, கப்பற்படை என மூன்று வகை படைகளும் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. மேலும் பீரங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கொண்டு பயிற்சி செய்து வருகின்றன. இந்த பயிற்சியின் நோக்கம் தற்போது வங்கதேசத்தில் பதற்ற நிலையை கட்டுபடுத்தவும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கவும், வங்கதேசத்திற்கு இடையுறாக இருக்கும் அரக்கன் ஆர்மியை எதிர்கொள்ளவும் இந்த ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யூனுஷ் கூறுகையில் நாம் வங்கதேசம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். விளையாட்டு என்றாலும் போர் என்றாலும் வெற்றி முக்கியம் அதனால் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளோம் என கூறினார்.

Exit mobile version