இந்தியா-சீனா இடையேயான பிரச்சனை கடந்த மே மாதம் முதல் தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரங்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 15 ஆம் தேதி அன்று கல்வான் பள்ளத்தாக்கில் 2 இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதனால் இந்திய சீன உறவில் கசப்புத் தன்மையும் அதிகரித்தது எனினும் பிரச்சனையை சுமுகமான முறையில் முடிக்கவே சீனா விரும்புகிறாராம். ஆனால் எல்லையில் பிரச்சினையை தீர்க்க சீன ராணுவம் ஒத்துழைப்பதில்லை என்பது இங்கே அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்திய சீன எல்லையில் இந்தியா தனது பீரங்கிகளையும் படைகளையும் குவித்து வருகிறது. கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமர் பகுதியில் இந்திய ராணுவம் தனது டி 90 டி 72 பீரங்கிகளையும் PMP 2 வாகனங்களையும் குவித்து வருகிறது.
கிழக்கு லடாக்கின் குளிர் பகுதியை சமாளிக்கும் வகையில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள பீரங்கிகள் 40 டிகிரி குளிரில் இயங்கும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.