மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!
சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா ஓராண்டுகள் ஆகியும் மக்களை விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்தே அதிக அளவு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததால் மத்திய அரசு ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து 7 மாதங்களாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.7மாதங்களாக மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது.
அதற்கடுத்து மத்திய அரசு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடிக்க தவறியதால் மீண்டும் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.அந்தவகையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கே தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் மகராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு ஊரடங்கு போட்டுள்ளனர்.அந்தவகையில் அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி மூலம் சந்தித்து பேசினார்.
தற்போது கொரோனாவின் 2வது அலை அதிக அளவு அதிகரித்து வருகிறது.இதனால் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் முதல் இடத்தில் அமெரிக்காவும்,இரண்டாம் இடத்தில் பிரேசிலும்,மூன்றாம் இடத்தில் இந்தியாவும் இருந்தது.ஆனால் தற்போது கொரோனாவின் 2வது அலை தீவிரமாகி வருவதால் கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது 2 இடம் நோக்கி சென்றுள்ளது.இவ்வாறு கொரோனா அதிகரித்து வந்தால் நமது இந்தியா முதலிடத்தை பிடிக்க அதிக அளவு வாய்புகள் உள்ளது.
அமெரிக்கா:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:3,19,89,157.
குணமடைந்தோர் எண்ணிக்கை:2,45,59,175
உயிரிழந்தோர் எண்ணிக்கை:5,76,298.
இரண்டாம் இடத்திலிருக்கும் இந்தியா:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:1,36,86,073.
குணமடைந்தோர் எண்ணிக்கை:1,22,50,440.
உயிரிழந்தோர் எண்ணிக்கை:1,71,089.
மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசில்:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:1,35,21,409
குணமடைந்தோர் எண்ணிக்கை:1,19,57,068.
உயிரிழந்தோர் எண்ணிக்கை:3,55,031.