ஒரே நாளில் 2 தங்க பதக்கங்ககளை வென்ற இந்தியா!!!

Photo of author

By Preethi

ஒரே நாளில் 2 தங்க பதக்கங்ககளை வென்ற இந்தியா!!!

Preethi

Updated on:

19 வது ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றது.இத்தொடர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா  ஓரே நாளில் இரண்டு தங்க பதக்கங்கள் வென்று மாஸ் காட்டியுள்ளது.10 மீட்டர் ஏர் ரைபிள் எனப்படும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியா இதற்கு முந்தய உலக சாதனையை  1893.7 புள்ளிகள் எடுத்து சீனாவின் முந்தய சாதனையை முறியடித்தது.பதின்பருவ உலக சாம்பியன்களான ருத்ராக்‌ஷ் பாட்டீல், ஒலிம்பியன் திவ்யான்ஷ் பன்வார், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் இந்த அணியில் இடம்பெற்றிந்தனர்.

இதனைத்தொடர்ந்து மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்துடன் நடந்த அறையிறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற  இந்திய அணி நேற்று இலங்கை அணியுடன் இறுதிச்சுற்றில் மோதியது இந்த இறுதிச்சுற்றில்  19 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடி தங்க பதக்கத்தை தனதாக்கியது.இந்நிலையில் ஒரே நாளில் இரண்டு தங்க பதக்கத்தை வென்ற இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பல்வேறு அரசியல் பிரமுர்களும் இந்தியாவின் இந்த சாதனையை பாராட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.இதனைத்தொடர்ந்து நமது இந்திய பிரதமர் தனது அதிகாரபூர்வமான Xஇணைய பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவின் பதக்க பட்டியலானது 2  தங்கம், 3  வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11  பதக்கங்களை குவித்துள்ளது.இந்நிலையில் இவ்விரு தங்க பதக்கங்களும்  இந்தியாவை 6ம் இடத்திற்கு உயர்த்தியுள்ளது.