Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

படம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள பல தடங்கள்களுக்கு இடையில் படம் துண்டு துண்டாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் இப்போது 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ரிலிஸ் குறித்த செய்திகளை எதிர்பார்த்து வரும் வேளையில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்தியன் 2 இப்போது தள்ளிபோகும் என அறிவிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் போது ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் அந்த படத்துடனான மோதலைத் தவிர்ப்பதற்காக இந்தியன் 2 ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகிறது. மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அப்போது படம் வெளியானால் கமலின் அரசியல் செல்வாக்குக்கு உதவும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பயிகிறது.

Exit mobile version